வவுனியாவில் இளைஞர்கள் இருவர் கைது!

வவுனியா பொலிஸாரால் இரு இளைஞர்கள் இன்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த இருவரும் இன்று மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார் வழி மறித்துள்ளனர்.

எனினும் பொலிஸாரின் சைகையை மீறி இருவரும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி தப்பிசென்றனர்.

இதன்போது அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் குழுவினர் குறித்த இருவரையும் துரத்திச்சென்று பூங்காவீதியில் வைத்து மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்

கைது செய்யப்பட்ட இருவரும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்திய பின்னர் சென்றமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சைகையை மீறி பயணித்தமை போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.

கைது செய்த இருவரையும் பொலிஸாரின் வாகனத்தில் ஏற்றி சென்றிருந்தனர்.
Previous Post Next Post