கொரோனா வைரஸினால் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை!!

கேகாலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபரால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி இத்தாலியில் இருந்து இலங்கை வந்த குறித்த நபர் அயலவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தனது அடுத்த வழக்கு விசாரணை வரை குறித்த நபரை கேகாலை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எனினும் குறித்த சந்தேக நபர் தனது தனிமைப்படுத்தல் நடவடிக்கையை மேற்கொள்ளாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவல் தெரியவந்தமையினால் அதிகாரிகள் உட்பட அனைவரும் குழப்பமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

350 கைதிகள் மாத்திரம் வைக்கப்பட கூடிய குறித்த சிறைச்சாலையில் தற்போது 900க்கும் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இத்தாலியில் இருந்து வந்த நபருக்கு கொரோனா வைரஸ் இருக்கும் என்பதால் இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
Previous Post Next Post