கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் தீ விபத்து; முற்றாக கருகியது வன் பொருளகம்!!

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள வன் பொருளகம்ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டு முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

மேலும் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மட்டு மாநகர சபையின் தீயணைப்பு பணியாளர்கள் துரித முயற்சிகளை மேற்கொண்டு வரும் அதே வேளை இராணுவத்தினரும் தங்களது பங்களிப்பினை நல்கி அவர்களுக்கு உதவி வருகிறார்கள்.

இத் தீப்பரவல் காரணமாக மின்சார துண்டிப்பும் நிகழ்ந்துள்ள அதே வேளை பிரதான வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

மக்கள் ஒன்று கூடுவதை தடுக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இச்சமயம் அவ்விடத்திலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குழுமியுள்ளமை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் எனவே வேடிக்கை  பார்ப்பதை தவிர்த்து தீயணைப்பு வீரர்களுக்கு ஒத்துழைப்பை நல்குவது காலத்தின் தேவையாகும்.
Previous Post Next Post