இலங்கையர் ஒருவர் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி!!

உலக சுகாதார மையத்தையே கதிகலங்கவைத்து, உலக பொருளாதாரத்தையே திணறடித்து, உலகத்தையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் கொரோனவைரஸ் தொற்றுக்காரணமாக உலக மக்கள் தினம் தினம் இறந்தவண்ணம் உள்ளனர்.

இத்தாலியில் நாளுக்குநாள் இறப்பு விகிதம் அதிகரித்துவரும் இந்நிலையில் இத்தாலி முதியோர் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த 70 வயதான இலங்கையர் ஒருவர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டின் சிசிலி தீவின் மேலிசா பிரதேசத்தில் வசித்து வந்த இலங்கையரே கொரோனா வைரச் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இத்தாலியில் கொரோனா காரணமாக இதுவரை 6 ஆயிரத்து 820 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 8 இலங்கையர்கள் கொரோனவைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக ரோம் நகரில் உள்ள இலங்கையின் தூதரக அலுவலகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பின் பின்னர் 201பேர் கண்டக்காடு மற்றும் பூனாணை நிலையங்களில் இருந்து இன்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post