முப்படையினர், பொலிஸாரின் அர்ப்பணிப்பிற்கு கொழும்பு பேராயர் பாராட்டு!

கொரோனா தொற்று தொடர்பாக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அர்ப்பணிப்பினை கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பாராட்டியுள்ளார்.

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் நோய்த்தொற்றுக்குள்ளானோரை கவனித்துக்கொள்ளும் விதம் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தங்களின் அசௌகரியங்களை கருத்திற்கொள்ளாது பாதுகாப்பு தரப்பினர் செயற்படுவதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post