ஊரடங்குச் சட்டம்; கொரோனா தொற்றியவர்கள் அடையாளம் காணப்படுவது குறைந்துள்ளது!!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்படுவது குறைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய 77 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவர்களில் இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Previous Post Next Post