பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு தொற்று நீக்கி மருந்து தெளிக்கும் பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கைகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு இந்த தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலிலும் ஒழுங்குபடுத்தலின் கீழும் உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரணையுடன் இந்த தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.

இந்த பணிகள் இன்று காலை மட்டக்களப்பு பிரதான பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கையின்போது மட்டக்களப்பில் இருந்து சேவையில் ஈடுபடும் அரச,தனியார் பஸ்கள்,முச்சக்கர வண்டிகளுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.

அத்துடன் பஸ்களில் 20க்கு மேற்பட்டவாகள் பயணம் செய்வதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளையும் மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துவந்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட இந்த செயற்பாட்டுக்கு பஸ்சாரதிகள்,முச்சக்கர வண்டி சாரதிகள் பூரண ஆதரவினை வழங்கியதை காணமுடிந்தது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post
HostGator Web Hosting