கொரோனாவுக்கு பயந்து பொருட்களை வாங்க சென்ற நபர் பரிதாபமாக மரணம்!!

கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தையில் வர்த்தக நிலையத்தில் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்ற நபர் ஒருவர் உயிரிந்துள்ளார்.

நேற்று மாலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வர முன்னர் அவசியமான பொருட்களை கொள்வனவு செய்ய வந்த நபர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துள்ளார்.

இதனால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மஹர பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நேற்று ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பொது மக்கள் அனைவரும் கடைகளில் ஒன்றுக்கூடியதனை காண முடிந்துள்ளது.

பொது மக்கள் அதிகம் ஒன்றுக்கூடும் இடங்களிலேயே கொரோனா வைரஸ் தொற்று பரவ அதிக வாய்ப்புகுள் உள்ளமையினால் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Previous Post Next Post