புதுக்குடியிருப்பு விக்னேஸ்வரர் ஆலயத்தில் சங்காபிஷேகம்!!

செ.துஜியந்தன்
இன்று மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்னேஸ்வரர் அலயத்தில் வருடாந்த 1008 நவோத்ர சகஷ்ர சங்காபிஷேகம் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இரா.கோபாலசிங்ம் குருக்கள் மற்றும் சிவஸ்ரீ கோ.கிரிதரக்குருக்கள் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இங்கு உலகையும், நாட்டையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு கோரி விசேட பூசைவழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இவ் வழிபாடுகளில் ஆலயநிர்வாக சபையின் முக்கிய உறுப்பினர்கள் மட்டும் பங்குபற்றியிருந்தனர்.

தற்போது உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோயானது உலகமக்களின் இறைபிரார்த்தனையினால் இல்லாது ஒழிக்கப்படும் மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் இருந்தவாறு இறைபிராத்தனைகளில் ஈடுபடுமாறு சிவஸ்ரீ இரா.கோபாலசிங்கம் குருக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Previous Post Next Post