உடனடியாக அனைத்துக்கட்சி மாநாட்டை கூட்டுங்கள்! கரு ஜயசூரிய கோரிக்கை

கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பில் அனைத்துக்கட்சி மாநாட்டை கூட்டவேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்மூலம் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இந்த கடும் பிரச்சனைக்கு கூட்டு தீர்மானத்தை எடுக்கமுடியும் என்று அவர் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தவேளையில் தேசிய ரீதியாக இந்த பிரச்சனையை வெற்றிக்கொள்ள நிர்வாகம் அனைத்து பிரிவினரையும் ஒன்றிணைக்கவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளோவோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் நாட்டு மக்கள் அனைவரும் சுயலாபங்களை கருதாமல் பணியாற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தவேண்டும். அத்துடன் அவர்களின் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

எனவே நாட்டு மக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் தொடர்பில் தமது கோரிக்கையை ஜனாதிபதியும், பிரதமரும் ஏற்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுப்பார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்
Previous Post Next Post