இரண்டு வாரங்களுக்கு மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டுமென விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை!!!
இரண்டு வாரங்களுக்கு மக்கள் சுய கட்டுப்பாடடுடன் செயற்பட வேண்டுமென முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்

தற்போது கொரோனா வைரஸின் தாக்கமானது உலகளாவிய ரீதியில் பாரியளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது இலங்கையிலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளார்கள் வடக்கை பொருத்தவரைக்கும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதி இந்தப் பகுதி ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதி எனவே இந்த கொரோனா வைரஸ் தாக்கமானது வடபகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துமேயானால் மீண்டும் தமிழினம் பாரிய அழிவினை சந்திக்க நேரிடும் எனவே வடக்கு மக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும்.

அரசாங்கத்தினால் எதிர்வரும் இரண்டு கிழமைகளுக்கு தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது வடக்கை பொறுத்தவரை பொது மக்கள் அன்றாட கடமைகளை சுய கட்டுப்பாடுடன் மேற்கொள்வதன் மூலம் வைரஸில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும் அத்தோடு உலக நாடுகளில் வல்லரசு நாடுகளில் கூட இந்த கொரோனாவைரஸ் தாக்கமானது பாரியஅளவு தாக்கத்தை செலுத்தியுள்ளது.

எனவே வடக்கு மக்கள் இதனை கருத்தில் கொண்டு சுயகட்டுப்பாட்டுடன் வீடுகளில் தங்கள் கடமைகளைச் செய்யுங்கள் பொதுவாக வெளியில் நடமாடும் போது கட்டாயமாக மாஸ்க் அணிந்து செல்லுங்கள் அத்தோடு தற்பொழுது உங்கள் வீடுகளுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வீடுகளைத் தேடி வர உள்ளன எனவே நீங்கள் வெளியே செல்ல வேண்டிய தேவை இல்லை அனாவசியமான வேலைகளை தவிர்த்து சுய கட்டுப்பாடுடன் செயற்பட்டு கொள்வதன் மூலம் நாம் வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது வடக்கில் ஏற்கனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாம் மீண்டும் கொரோனாவுக்கு பலியாவதை தவிர்த்துக் கொள்வதற்கு நாம் அனைவரும் சுயகட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் ஊரடங்கு தளர்த்தப்பட்ட வெளியிலும் நாம் ஒன்றுகூடி பொருட்களை வாங்குவதிலும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post