கரைச்சி பிரதேச சபையின் விசேட செயலணி கூடியது; முக்கிய விடயங்கள் தொடர்பிலும் ஆராய்வு!!!

கரைச்சி பிரதேச சபையின் விசேட செயலணி நேற்று பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நேற்று மாலை 4 மணியளவில் கூடியது.

தற்போது உலகத்தையே பாரிய அச்சுறுத்தலுக்கு ஏற்படுத்தியுள்ள கோரோனா வைரஸ் காரணமாக நாடு பூராகவும் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரத்தில் சந்தைகளில் எவ்வாறு சன நெரிசலில் இருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் சன நெரிசலை குறைப்பது தொடர்பாகவும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசுறுவது தொடர்பாகவும் கிராமங்களில் நிகழும் மரணச் சடங்குகள் நிறைவுற்ற பின்னர் அவ்விடம் சென்று தொற்று நீக்கி விசுறுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது. மற்றும் குடிநீர் தேவைகளை மக்களுக்கு நிறைவேற்றுவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post