இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் சுய ஊரடங்கை கைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 315 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்த வேண்டும் எனவும் மார்ச் 22ஆம் திகதியான இன்று யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சுய ஊரடங்கை பின்பற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஊரடங்கினால் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. சுய ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள நிலையில் இரவு 9 மணிக்கு ஊரடங்கு நிறைவுக்கு வருகின்றது.


இதேவேளை, மக்கள் ஊரடங்கு அறிவிப்பை ஏற்று தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைத்து போக்குவரத்து மார்க்கங்களையும் நிறுத்தியுள்ளதோடு, கோயம்பேடு மொத்த சந்தையும் இயங்கவில்லை. அத்துடன் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அத்துடன், மக்கள் ஊரடங்கையொட்டி இன்று 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Previous Post Next Post