மட்டக்களப்பில் பொருட்கள் கொள்வனவிற்காக திரண்ட மக்கள்! பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு பூராகவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு மட்டக்களப்பு உள்ளிட்ட சில இடங்களில் தளர்த்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து மக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட்கள் கொள்வனவு செய்வதிலும், வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பிரதான நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் மக்கள் வெள்ளம்போல் திரண்டு தமது அன்றாட பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், முகக் கவசம் அணியாத எவரையும் பொதுச் சந்தைககுள் செல்ல அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது.

Previous Post Next Post