கிழக்குமாகாண மாணவர்களுக்கு புதிய கற்றல் இணையம் அறிமுகம்...

வீட்டிலிருந்தவாறு கற்பதற்கு உயர்தர மாணவர்களுக்காக இணையத்தில் அறிமுகப்படுத்தியுள்ள வினாவிடைநிகழ்ச்சித்திட்டம் இன்றுமுதல் ஆரம்பம் கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர் அறிவிப்பு

கிழக்குமாகாண கல்வித்திணைக்களம் இம்முறை க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்காக முகநூல் மற்றும் இணையத்தளத்தில் வினாவிடை நிகழ்ச்சித்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சித்திட்டம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்ற இந்தவேளையில் வீட்டிலிருந்தவாறு கற்பதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சகலமாணவர்களும் அதைப்பயிற்சிசெய்து கற்றலில் ஈடுபடுமாறு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் கேட்டுள்ளார்.

அவற்றை கீழ்வரும் முகவரிகளில் பார்க்கமுடியும். முகநூல் ஆயின் FaceBook. Provincial - Education-Department-Eastern-Province இணையத்தளம் ஆயின் WebPage. edudept.ep.gov.lk ஆகிய முகவரிகளில் பார்க்கமுடியும்.

பணிப்பாளர் மன்சூர் தகவல் தருகையில்.

உயர்தரத்தின் சகல விஞ்ஞான கணித வர்த்தக கலை தொழினுட்ப துறைகளில் குறிப்பிட்ட பாடங்களில் வினா விடைகள் முகநூல் மற்றும் இணையத்தளத்தில் பதிவிடப்படும்.
முதலில் முதல்நாள் ஒரு சிலகேள்விகள் அங்கு பதிவிடப்படும்.


அதனை மாணவர்கள் பார்த்து அல்லது பதிவிறக்கம் செய்து அதற்கான விடைகளை சுயமாகச்செய்துகொள்ளவேண்டும்.

மறுநாள் நாம் சரியான பதில்களை பதிவிடுவோம். அப்போது அவற்றைப்பார்த்து சரிபிழை தீர்மானிக்கலாம். பிழைவிட்டிருந்தால் அதனைத் திருத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு முதல் நாள் வினாவும் மறுநாள் விடையும் பதிவிடப்படும். இந்நடைமுறை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும். எனவே மாணவர்கள் பாடங்களைமீட்டு வினாக்களுக்கு பதிலளித்து பயிற்சியைசெய்து கொள்ளமுடியும்.

ஒருநாளில் செய்யமுடியுமான ஒருசில வினாக்களே பதிவிடப்படும். இம்முறை க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றுவோரும் ஏனையோரும் இவற்றைப்பார்த்துப் பயன்பெறலாம்.
Previous Post Next Post