ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு!

Image result for department of informationஊடகவியலாளர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோனைக்கு அமைவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post