ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்தியது ஏன்! பிரதமர் மஹிந்த விசேட உரை

நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தே இந்த ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்தியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

எந்த சந்தர்பததிலும் நோயாளர்கள், நோயின் தாக்கம் குறித்த தகவல்களை அரசாங்கம் மூடிமறைக்காது எனக் குறிப்பிட்ட பிரதமர், பயங்கரமான போர்ச் சூழலிலும்கூட தற்போதைய நிலைபோல ஊடரங்குச் சட்டத்தை அமுல்செய்யவில்லை என்றும் கூறினார்.

கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை விடவும் அதுகுறித்த அச்சம் நாட்டின் பல இடங்களிலும் தீவிரமாக பரவியுள்ளது.

ஊரடங்கு சட்டம அமுல்படுத்தப்படுவதற்கு முன்னரே மக்கள் முண்டியடித்து ஒருமாத்ததிற்குத் தேவையான அததியாசியப் பொருட்களையும் அதேபோல எரிபொருளையும் கும்பலாக நின்று கொள்வனவு செய்த சந்தர்ப்பங்களும் பல பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து ஏற்பட்ட அச்ச உணர்வுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு செல்லாமல் விமான நிலையத்திலிருந்து வீடுகளுக்குத் தப்பிச்சென்றவர்களை கைது செய்யும் நோக்கிலும் நாடளாவிய ரீதியில் ஊடரங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாட்டு மக்களுக்கு இன்றைய தினம் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து முடிவுகளை செய்திருப்தாக சுட்டிக்காட்டினார்.

“கொரோனா வைரஸினால் முழு உலகமும அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இந்த நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை யாவரும் அறிவார்கள்.

இந்த வைரஸ் பரவ ஆரம்பத்த நாளிலிருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் செய்த அதேவேளை, சீனாவில் இருந்த எமது மாணவர்களை மற்றைய நாடுகளை விடவும் நாங்கள் முதல்படியை எடுத்துவைத்து அழைத்துவந்தோம்.

நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தோம். இந்தியாவிற்கு வழிபாட்டிற்கு சென்றவர்களை அந்த அக்கறையின் நிமித்தமே நாட்டிற்கு அழைத்துவர நடவக்கை எடுத்துள்ளோம்.

நாட்டிற்கு வந்த ஆயிரக்கணக்கானவர்களை நோயின் தன்மையை கண்டறிந்து மருத்துவ முகாமில் தங்கவைத்து பரிசோதனை செய்யும் பணிகளையும செய்துவருகின்றோம்.

அரசாங்கம் என்ற வகையில் இச்செயற்பாடு மிகவும் கடினமானதாகும். பல்கலைக்கழகம், பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை அளித்தோம். ப

டிப்படியாக விமான சேவைகளை மட்டுப்படுத்தி, வருகையின் வழியை மூடினோம். நாட்டினதும், உலக நிலையை அவதானித்து இந்த நடவடிக்கையை நாம் எடுத்தோம்.

எதிர்காலத்திலும் அப்படியே செயற்படுவோம். நான் இப்போது உரையாடும் சந்தர்ப்பத்திலும்கூட ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் பயங்கரமான அமைப்பிற்கு எதிராக போர் செய்த காலத்திலும்கூட இந்நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அறிவிக்கவில்லை. எனினும் ஒருசிலரது பொறுப்பற்ற செயற்பாட்டினால் இநநிலை ஏற்பட்டுள்ளது.

இப்போதும் இந்நாட்டு மக்களின், பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் நடவடிக்கையினால் இடையயூ ஏற்பட்டால் கவலை வெளியிடுகிறோம்.

மக்களுக்கு அன்றாடம் அவசியமானவை பூரணப்படுத்தவும் அரசாங்கத்தினால் முடியும். பல மாதங்களுக்குத் தேவையான மருந்து அத்தியாவசியப் பொருட்களை களஞ்சியப்படுத்தி உள்ளோம்.

அதுகுறித்து சந்தேகம் அச்சம் கொள்ள வேண்டாம். நோய், நோயாளர் குறித்தும் அறிகுறிகள் குறித்தும் மக்களைத் தெளிவுபடுத்தவும், தெரிவிக்கவும் பின்வாங்கமாட்டோம். மறைக்கவும் மாட்டோம்.

முழு உலகமே சங்கடத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் அனைவரும் மிகுந்த யோசனையுடன் தொலைநோக்குடன் செயற்பட வேண்டும்.

ஆபத்து நேரத்தில் ஒன்றாய் இருப்போம். மருத்துவர்கள், அரசாங்கம் வழங்கும் தகவல்களைப் பின்பற்றினால் இந்த ஆபத்திலிருந்து விடுதலையாகலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனை விடவும் பாரிய பயங்கரத்தை சந்தித்த இனத்தவர்களான எமக்கு இந்த ஆபத்திலிருந்தும் மீளமுடியும் என நம்புகிறேன்)


Previous Post Next Post