மரநடுகை மற்றும் சிரமதானம்!!

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு என்னும் தொனிப் பொருளில் பொழிவடைந்த கிராம வேலைத் திட்டத்தின் மூலம் மரநடுகை மற்றும் சிரமதானம் இன்று (01) நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

இதனடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மரநடுகை மற்றும் சிரமதான தேசிய வேலைத் திட்டம் இடம்பெற்றது.

இதன்போது தியாவட்டவான் ஆயுள்வேத வைத்தியசாலை, தியாவட்டவான் முத்துமாரியம்மன் ஆலயம், தியாவட்டவான் ஜும்ஆ பள்ளிவாயல், தியாவட்டவான் பன்சாலை, தியாவட்டவான் கிறிஸ்தவ தேவாலயம் என்பவற்றில் சிரமதானமும், மர நடுகையும் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், மதகுருமார்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.Previous Post Next Post