களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை இயங்கவில்லை

செ.துஜியந்தன்
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக இன்று களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை இயங்கவில்லை. சந்தையின் பிராதான வியாபார நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட்டு சந்தையினுள் கிருமி ஒழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்டவுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு பட்டிருப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தையின் செயற்பாடுகளை எதிர்வரும் நாட்களில் மட்டுப்படுத்தும் செயற்திட்டத்தினை மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபை மேற்கொண்டுவருவதாக பிரதேச சபையின் தவிசாளர் யோகநாதன் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சனநெரிசல் மிக்க பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களின் சுகாதரபாதுகாப்பு நலனைக்கருத்தில் கொண்:டும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்தில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது.

இதற்கிணங்க இன்று களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையின் வியாபார நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பொதுச்சந்தையினுள் கிருமி ஓழிக்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்படவுள்ளது. பட்டிருப்பு தொகுதியிலுள்ள படுவான்கரை, எழுவான்கரை மக்களின் அன்றாடத்தேவைகளை பூர்த்தி செய்யும் வியாபார ஸ்தலமாக களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தை விளங்குகின்றது. இதனைக்கருத்தில் கொண்டு இங்கு அன்றாடம் கூலித்தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காதவகையில் சனநெரிசலைக்கறைத்து மடட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வியாபார நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post