வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் சிறப்புற நடைபெற்ற காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் காரைக்கவி கந்தையா பத்மானந்தன் அவர்கள் எழுதிய காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு நேற்றையதினம் (29.02.2020)  வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான கலையரங்கில் நடைபெற்றது.

கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு.தி.ஜெயகாண்டீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்வியியற் கல்லூரியின் மேனாள் பீடாதிபதி திரு.க.சுவர்ணராஜா அவர்களும் கௌரவ விருந்தினராக ஒளிரும் வாழ்வு அமைப்பின் நிறுவுனர் திரு.ஜெகநாதன் சுதாநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் திரு.க.தனபாலசிங்கம் மற்றும் வவுனியா மத்திய மகா வித்தியாலய அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் மற்றும் கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.வே.இறைபிள்ளை அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வின் வரவேற்புரையினை கலாச்சார மன்றத்தின் செயலாளர் திரு.டினோத் ஜீவிதன் நிகழ்த்தியதுடன் கல்லூரியின் பீடாதிபதி திரு.தி.ஜெயகாண்டீபன் அவர்கள் தலைமையுரையினை தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்று தொடர்ந்து நூல்களின் அறிமுக நயவுரைகளும் இடம்பெற்றது. 

விசேட நிகழ்வாக மண்ணிசை சுதந்திர அரங்க ஆற்றுகை நிகழ்வும், புதுவாழ்வுப் பூங்கா நிறுவனத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் நடன நிகழ்வும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து காரைக்கவி கந்தையா பத்மானந்தன் அவர்களின் தலைமையில் பிரபல கவிஞர்களின் பங்கேற்புடன் வாழ்ந்து பார்ப்போம் வா தோழாஎனும் விசேட கவியரங்கமும் நடைபெற்றது.

தொடர்ந்து நினைவுப் பரிசில்கள் வழங்கள் இடம்பெற்று தொடர்ந்து நிகழ்வின் கௌரவ விருந்தினர் மற்றும் பிரதம விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்று தொடர்ந்து காரைக்கவி கந்தையா பத்மானந்தன் அவர்களின் ஏற்புரையினை தொடர்ந்து நன்றியுரைடன் நிகழ்வுகள் நிறைவடைந்தது.

(செய்தித் தொகுப்பு- யாழ் லக்சன்)
Previous Post Next Post