உடைகளின்றி பெண்ணொருவர் இழுத்துச் செல்லப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலிஸ் உயர் அதிகாரி வெளியிட்டுள்ள விளக்கம்.

உடைகளின்றி பெண்ணொருவர் இழுத்துச் செல்லப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் ஊடகங்களுக்கு விளக்கம் வழங்கி உள்ளனர்.

பெண் ஒருவர் உடைகள் இன்று இழுத்துச் செல்லப்பட்டு ஒரு குழுவினராக தாக்கப்பட்டதாக வெளியான காணொளி சமூக ஊடகங்களில் பேசுபொருளாக இருந்த நிலையில் இது தொடர்பில் டி.ஐ.ஜி பிரியந்த ஜெயக்கொடி (DIG Priyantha Jayakody) விளக்கம் கொடுத்துள்ளார்.

அதன்படி கடந்த மார்ச் 16ம் திகதி தொடங்க பகுதியில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது . தொட்டலங்க , ஹத்தபஹே வத்த பிரதேசத்தில் போதை பொருள் சோதனைக்காக பொலிஸ் குழுவொன்று நிறுத்தப்பட்டிருந்தது.

சோதனை இடம்பெற்ற வேளையில் ஆண் மற்றும் ஒரு பெண் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவர்களை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது.

குறிப்பிட்ட நபர்களிடம் ஹெரோயின் போதைப் பொருள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணை கைது செய்ய முற்பட்ட போது அவர் தனது உடைகள் அனைத்தையும் அகற்றி விட்டு "முடிந்தால் என்னைக் கைது செய்து காட்டுங்கள்" என்று போலீசாருக்கு சவால் விடுத்துள்ளார் இதுதான் நடந்த சம்பவம் .

தற்போது ஹெரோயின் வைத்திருந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பெண்ணை கைது செய்ய விசாரணைகள் நடந்து வருவதாகவும் டிஐஜி மேலும் தெரிவித்துள்ளார் .
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் இன் உத்தரவின்படி விசாரணைகள் முடிந்ததும் இலங்கை காவல்துறை இது குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post