தரவைப் பிள்ளையாரின் புகழ் பாடும் தரவை நாயகன் பாடல் வெளியீடு!!

கிலசன்
கல்முனை மாநகரின் எல்லையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கல்முனையின் இதயமாக திகழும் தரவை ஸ்ரீ சித்தி விநாயகரின் புகழ் பாடும் தரவை நாயகன் பாடல் நேற்று சனிக்கிழமை ஆலயத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது.

கிஷா பில்ம் மேக்கர்ஷின் தயாரிப்பில் தமிழகரன் சனாவின் இனிமையான இசையில் பாடலாசிரியர் கவிஞர் ஆசிரியர் வியன்சீர் அவர்களின் பக்தி நயத்துடனான வரிகளில் பல்கலைக்கழக மாணவி ஜெயராசா யசோமியின் அழகிய குரலில் இந்த பாடல் உருப்பெற்றிருந்தது. கல்முனை மண்ணின் இளம் படைப்பாளர்களின் கூட்டு முயற்சியில் ஓர் பக்தி பாடல் வெளிவந்துள்ளதுடன் இப்பாடலுக்கான கீபோர்ட் இசையினை ரமேஷ் காயந்தி மற்றும் யுவன் ஆகியோரும் இணைந்து வழங்கியுள்ளனர்.

இப்பாடலின் இறுவெட்டு வெளியீடு தரவை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தலைவரின் தலைமையில் ஆலய முன்றலில் இடம்பெற்றதோடு, உற்சவ கால பிரதம குரு ஆலய பிரதம குரு ஆலய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இணைந்து தரவை நாயகன் பாடலின் இறுவெட்டினை வெளியீடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கு கிஷா பில்ம் மேக்கர்ஷின் தலைவர் வி.டிலோஜன் உரையாற்றுகையில் பல படைப்பாளர்கள் நம் மத்தியில் உள்ள போதிலும் அவர்களுக்கான அங்கீரமும் மக்களின் ஆதரவும் கிடைக்காமை கவலைக்குரிய விடயமெனவும் இனிமேலாவது நமது உள்ளூர் கலைஞர்களுக்கான ஆதரவை பொதுமக்கள் வழங்க வேண்டுமெனவும் கேண்டுக்கொண்டார்.


Previous Post Next Post