மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சின் விசேட ஊடக அறிவித்தல்.

01. நாட்டில் ஊரடங்கு அமுலில் இருக்கும் காலத்தில் அத்தியாவசிய மற்றும் மிருக வளர்ப்பு நடவடிக்கைகள் தடையின்றி நடைபெற வேண்டியுள்ளது .

02. ஊரடங்கு அமுலில் இல்லாத காலத்தில் விவசாய அமைப்புக்களால் தமது உற்பத்திகளை 562 கமநல சேவை மத்திய நிலையங்கள், லக்சதொச வர்த்தக நிலையங்கள், மகாவலி காரியாலயங்கள் மற்றும் வலய காரியாலயங்களிலூடாக தேவையான வர்த்தக நிலையங்களிற்கு வழங்கி நுகர்வோர் கொள்வனவு செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது

03. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நேரங்களில் வியாபாரிகள் தமது உற்பத்திகளை விற்பதற்கு இடவசதிகள் செய்து தருவதற்கு கண்ணொருவ விவசாய ஆராய்ச்சி நிலையம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக பணிப்பாளர் (தேசிய விவசாயத் தகவல் மத்திய நிலையம் ) எஸ். பெரியசாமி அவர்களை 071 4157585 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தேவையானவற்றைச் செய்து கொள்ளல் வேண்டும் நுகர்வோர் அவ்விடத்தில் பொருட்களைக் கொள்வனவும் செய்யலாம்.

04. அதேபோல் ஊரடங்கு அமுலில் இருக்கும் நேரத்தில் விவசாயச் செயற்பாடுகளுக்குத் தேவையான இரசாயன மற்றும் காபன் உர வகைகள், விதை மற்றும் இரசாயனப் பொருட்களைத் தடையின்றி எடுத்துச் செல்வதற்கும் களஞ்சியப்படுத்து வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரங்களில் தங்களது பிரதேசத்திலுள்ள விவசாய சங்கங்களில் அல்லது விற்பனை நிலையங்களில் வாங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

05. சகல நெல் கொள்வனவு மத்திய நிலையங்களும் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் திறந்து வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது . எனவே தமது உற்பத்திகளை அங்கே எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியும்.

06 . அனைத்து விலங்கு உற்பத்திகளும் (பால் , முட்டை, இறைச்சி ) மற்றும் அனைத்து விலங்குணவு உற்பத்திகளுக்கும் தேவையான பொருட்களை ஊரடங்கு காலத்திற்குள் போக்குவரத்து செய்யவும் களஞ்சியப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

07. சிறு போகத்தின் உடன் செயற்பாடுகளுக்காக நீரைப் பெறுகின்ற போது முறையாக போகக் கூட்டத்தை நடத்தும் வரை விசாய அபிவருத்தி முகாமைத்துவக் குழு நீரைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக அவசியமான தீர்மானங்களை எடுத்து உடனடியாகச் செயற்பட முடியும். அத்தோடு பிரதான நீர் முகாமைத்துவக் குழுக் கூட்டம் இடம் பெறும் வரை மகாவலிப் பகுதியில் ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவுகளின் படி சிறு போகத்தின் செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்க முடியும் .

நீல் பண்டார கபுகித்த
செயலாளர்
24/03/2020.


Previous Post Next Post