மூன்று நாட்களுக்கு பின்னர் கண்டி நகரில் மக்கள் கூட்டம்!

நாட்டில் அமுல்செய்யப்பட்ட ஊடரங்குச் சட்டம் இன்று காலை 06 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அன்றாட செயற்பாடுகளை ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நொடியிலேயே ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் கண்டி நகரிலுள்ள பிரதான பல்பொருள் அங்காடி நிலையங்கள், மருந்தகங்களில் மக்கள் கூட்டமாக இருக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செயல்பாடுகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

கடந்த மூன்று தினங்களாக வெறிச்சோடிக் கிடந்த கண்டி - ஸ்ரீதலதா மாளிகை, கண்டி வர்த்தக மையம், பொதுப் போக்குவரத்து மற்றும் பிரதான வீதிகள் என்பன வாகனங்கள் மற்றும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post