பேக்கரிப் பொருட்களை விநியோகிக்க அனுமதி!

ஊரடங்குச் சட்ட காலத்தில் பேக்கரி உற்பத்திப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், தினப் பத்திரிகைகள் மற்றும் விசாய உற்பத்திகளை எடுத்துச் சென்று விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன,

“குறித்த நடவடிக்கைகளை அந்தந்தப் பகுதி பொலிஸ் பிரிவுகளில் அனுமதி பெற்று மேற்கொள்ள முடியும். இது குறித்து அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது" - என்றார்.
Previous Post Next Post