மத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை!

மத்திய வங்கியின் அனுமதிப்பெற்ற வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளை இன்று திங்கட்கிழமை குறைந்தது 2 மணித்தியாலமாவது திறக்கவேண்டும் என்று மத்திய வங்கி கோரியுள்ளது.

காவல்துறை ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் காலத்தில் அவசர வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே தமது கிளைகளை திறக்குமாறு மத்திய வங்கி கேட்டுள்ளது.

எனினும் பொதுமக்கள் பெருமளவில் இணையத்தின் ஊடான கொடுப்பனவு முறைகளை கையாளுமாறு கேட்டுள்ள மத்திய வங்கி, தன்னியக்க இயந்திரங்களில் பணத்தை எடுக்கும்போது குறைந்தளவான மக்கள் இருக்கும்போது அங்கு செல்லமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை வங்கிகள் திறந்திருக்கும்போது பொதுமக்கள் உரிய சுகாதார முறைகளை கையாளுமாறும் மத்திய வங்கி கோரியுள்ளது.
Previous Post Next Post
HostGator Web Hosting