கொரோனாவை மறைத்த ஹிந்தி பாடகி மீது மூன்று வழக்குகள் பதிவு

கொரோனா தொடர்பில் அலட்சியமாக செயற்பட்ட ஹிந்தி திரையுலகை சார்ந்த பிரபல பாடகி கனிகா கபூர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உத்தரபிரதேச பொலிஸாரினால் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் பல்வேறு நாடுகளால் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் மக்களுக்கு பல அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள.
தனிநபர்களுக்கு இடையே கணிசமான இடைவெளியினை பேணுதல் சுகாதாரம் சார்ந்த நடைமுறைகளை முறையாக பேணுதல், அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவிகளை உடனடியாக பெற்றுக்கொள்ள என்பன குறித்த அறிவுறுத்தல்களுக்குள் அடங்குகின்றன.

இந்நிலையில் ஹிந்தி திரையுலகை சேர்ந்த பிரபல பாடகி கனிகா கபூர், தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும் அது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் விருந்துகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர் கடந்த 11ம் திகதி லண்டனிலிருந்து நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post