நாளாந்த ஊதியம் பெறுவோருக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை; கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளாந்த ஊதியம் பெறுவோருக்கான தேவைகளை அறிந்து உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாட பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் வைத்தே நாளாந்த ஊதியம் பெறுவோருக்கான தேவைகளை அறிந்து மாவட்ட செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார் என அந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Previous Post Next Post