தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது -அமைச்சர் டக்ளஸ்!!

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள 4 பேர் இன்றையதினம் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக, குறித்த கைதிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக போராட்டம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நிலைமை தொடர்பாகவும் அவர்களது பாதுகாப்பு தொடர்பாகவும் உறுதிசெய்து தருமாறு அவர்களது உறவுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த சிறைச்சாலை உயரதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி நிலைமைகள் தொடர்பாக அவர் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டதுடன் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
HostGator Web Hosting