வங்கி ஊழியர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Image result for sri lanka banksநாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வங்கி ஊழியர்கள் தமது நிறுவன அடையாள அட்டை காண்பித்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் வங்கி ஊழியர்களை கேட்டுள்ளார்.

ஏற்கனவே ஊடகவியலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சில திணைங்களின் ஊழியர்கள், ஊரடங்குச் சட்ட காலப்பகுதியில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனுமதி பெற்ற வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கி கிளைகளை இன்று குறைந்தது இரண்டு மணித்தியாலங்கள் வரை திறக்குமாறு இலங்கை மத்திய வங்கி கேட்டுள்ளது.

எனினும் கொடுக்கல் வாங்களை மேற்கொள்ள முடியுமானவரை ATM இயந்திரங்களையும் ஏனைய தொழினுட்பவசதிகளை பயன்படுத்துமாறு மத்திய வங்கி வாடிக்கையாளர்களை கேட்டுள்ளது.

மேலும் கொடுக்கல் வாங்களை மேற்கொள்ளும் போது முடியுமானவரை அத்தியாவசிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் மத்திய வங்கி அறிக்கை ஒன்றை விடுத்து கேட்டுக்கொண்டுள்ளது.
Previous Post Next Post