ஊரடங்குச் சட்டம் நீடிப்பு – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு!!

கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அதேபோல், ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு, பின்னர் திங்கள் மாலை 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி எதிர்வரும் 24ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டம் நேற்று மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஊரடங்குச் சட்டம் நீடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.Previous Post Next Post