கொரோனா வைரஸ் தாக்கம்;சுயதனிமைப்படுத்திக் கொண்ட ஜேர்மன் அதிபர்!!

ஜேர்மனிய அதிபர் எஞ்சலாமேக்கல் வைத்தியரின் ஆலோசனையின் பின்னர் சுயதனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலைக்கு சென்றுள்ளார்.

ஜேர்மனிய பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். வைத்தியரின் ஆலோசகையின்படி அவர் உடனடியாகவே சுயதனிமைப்படுத்தலுக்கு சென்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு நோய் எதிர்ப்பு ஊசி மருந்து செலுத்தப்பட்டது. இதனையடுத்து அவருக்கு உரியமுறையில் பரிசோதனைகள் வரும் தினங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தநிலையில் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து அவர் நாடடுக்கான பணியையும் மேற்கொள்வார் என்று பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து ஜேர்மனியில் இரண்டு பேருக்கு மேலும் எவரும் ஒரு இடத்தில் கூடியிருக்ககூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடுமையான நடைமுறைகளும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஜேர்மனில் இதுவரை 65 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் நேற்று மாத்திரம் 651 பேர் கொரோனா வைரஸூக்கு பலியாகினர். இதனையடுத்து அங்கு பலியானோரின் எண்ணிக்க 5476 ஆக உயர்ந்துள்ளது

ஸ்பெயினில் நேற்று மாத்திரம் 394 பேர் கொரோனா வைரஸூக்கு பலியாகினர். இதனையடுத்து அங்கு பலியானனோர் எண்ணிக்கை 1720 ஆக உயர்ந்துள்ளது

பிரித்தானியாவில் இதுவரை 281 பேர் மரணமாகினர். பிரான்ஸில் நேற்று மாத்திரம் 112 பேர் மரணமாகினர் இதனையடுத்து அங்கு பலியானோர் 674 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 399 பேர் மரணமாகியுள்ளனர். இதேவேளை அவுஸ்திரேலியா நாடாளவிய முடக்கத்துக்கான அறிவித்தலை விடுத்துள்ளது.
Previous Post Next Post