வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் மூவர் கைது!!

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இன்று காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியில் மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று மாலை 6.00 மணி தொடக்கம் நாளை மறுதினம் காலை 6.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கின் போது தேவையற்ற விதமாக நடமாடிய மூன்று நபர்களையே இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் செல்பவர்களுக்கு வவுனியா பொலிஸாரினால் விசேட அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post