அனுராதபுரம் சிறைச்சாலையில் நடந்தது என்ன? இருவர் கொல்லப்பட்டது ஏன்? பொலிஸார் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக எந்தவொரு கைதியும் தப்பிச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்ஸை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக உறவினர்கள் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறைச்சாலையில் உள்ள பொது சொத்துக்களை சேதப்படுத்தி எதிர்ப்பு வெளியிட்ட கைதிகளை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இதனை கட்டுப்படுத்துவதற்கு முடியாமல் போனமையினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டுள்ளது.

துப்பாக்கி சூடு காரணமாக 8 கைதிகள் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலை பகுதியில் இதுவரையில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post