நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை பகுதியளவில் விலகிக் கொள்ளப்படவுள்ளது.

இதன்போது வெளியே செல்லும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்குமாறு சுகாதார பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வரிசையாக அருகில் நிற்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருக்கும் இடையில் ஒரு மீற்றர் தூரத்தில் நிற்குமாறு கொழும்பு வைத்தியசாலையின் பிரதான தாதி புஷ்பா ரமணி டி சொய்ஸா பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெளியில் செல்லும் ஒவ்வொருவரையும் முகத்திற்கு மாக்ஸ் அணிந்து செல்வதுடன், வீட்டுக்கு ஒருவரை மாத்திரம் வெளியில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இருப்பின் மட்டும் வெளியில் செல்லுமாறும், தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை முற்றாக தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கும்பலாக மக்கள் கூடிய வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post