கொரோனாவின் அடுத்த கேந்திர நிலையமாக மாறும் அமெரிக்கா- உலக சுகாதார அமைப்பு!!

கொரோனா வைரஸின் அடுத்த கேந்திர இடமாக அமெரிக்கா இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் அதிவேக தொடருந்து போன்று கொரோனா வேகமாக பரவி வருவதாக நியூயோர்க் ஆளுநர் ஆன்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 210 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 ஆயிரம் பேர் கொரோனாவால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மொத்தமாக 54 ஆயிரத்து 881 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன், இதுவரை 782 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post
HostGator Web Hosting