பொதுத் தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

பொதுத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது என அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதன் காரணமாக அன்றைய தினம் பொதுத் தேர்தலை நடத்த முடியாது என அதில் கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர் 14 நாட்கள் கடந்ததும் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post