வீண் வதந்திகளை பரப்பாதீர்கள்- பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை!!

கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைதிட்டங்கள் தொடர்பில் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறு தவறான விமர்சனங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் அதேவேளை, மக்களுக்கு அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களை வழங்குவதற்கான சிறப்பு திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது.

அத்துடன், பொறுப்பான அரசாங்கமாக, மக்களின் நலனுக்காக பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

இதனிடையே, முழு நாடும் ஆபத்தில் இருக்கும் நேரத்தில் அரசாங்கத்தின் திட்டங்களை வெற்றிகரமாக மாற்ற அனைத்து சமூக ஊடகங்களையும் ஆதரிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத்தின் முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்து தவறான தகவல்களை வேண்டுமென்றே விமர்சிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post