கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் ஆதரவு கொடுங்கள்!

கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரை ரட்னம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் தேர்தல் பிரசாரங்களை விடுத்து கொரோனா தொடர்பான விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவேண்டும்.

கொரோனா தாக்கம் காரணமாக அன்றாடம் தொழில்செய்வோர் தொழில்களை இழந்த நிலையில் காணப்படுகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கான உதவித்திட்டங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Previous Post Next Post