கொரோனா வைரஸ் தொற்று- பிரித்தானியா மூத்த இராஜதந்திரி ஒருவர் பலி!!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்து பிரித்தானியாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய தூதரகத்தில் துணைத் தலைவராக பணியாற்றிய 37 வயதான Steven Dick என்பவரே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் ஹங்கேரியில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், Steven Dickஇன் இழப்பால் தாம் பேரழிவை சந்தித்துள்ளதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Steven Dickஇன் மரணம் குறித்து வெளிவிவகார செயலாளர் கருத்து வெளியிடுகையில்,

“இந்த செய்தியை கேட்டு தாம் மிகவும் கவலையடைவதாகவும், Steven Dick ஒரு சிறந்த அர்ப்பணிப்புள்ள இராஜதந்திரி எனவும், கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில், குறித்த வைரஸினால் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஆரம்பத்தில் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

அந்த வகையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரித்தானியாவில் 9500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 450க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, பிரித்தானியா இளவரசர் சார்ள்ஸூக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post