கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் ஆறாக உயர்வடைந்துள்ளது.
தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதனை நேற்று உறுதி செய்தார்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனாவை தாண்டி, இத்தாலி ஈரான், ஜப்பான், அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்தியாவிலித்துவரை 332 பேர் குறித்த வைரஸ் தாக்கத்திற்கு இலக்காக்கியுள்ள அதிவேளை 5 பேர் இவ்வைரஸ் தாக்கத்தினால் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனவைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்வடைந்துள்ளது.
தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை இந்தியாவில், குறித்த வைரஸின் தாக்கத்தினால், தாய்லாந்தை சேர்ந்த இருவரும், நியூசிலாந்தை சேர்ந்த ஒருவரும், பாதிக்கப்பட்டுள்ளதாக, அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் இதுவரை 2,00,672 பேருக்கு, பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 8,950 பேர், தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post