இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கைது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் அதனை மீறிய குற்றச்சாட்டில் 291 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சன நடமாட்டத்தை குறைக்கும் வகையிலேயே ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும் என்று அரசாங்கம் கோரியுள்ளது.

அத்துடன் தமக்கிடையே சமூக இடைவெளிகளை பராமரிக்குமாறும் அரசாங்கம் கேட்டுள்ளது.

என்ற போதும் இந்த சந்தர்ப்பத்தில் அத்தியாவசிய காரணம் ஏதுமின்றி வெளியில் சுற்றித்திரிபவர்களே கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post
HostGator Web Hosting