கல்முனை இளைஞர் சேனை அமைப்பினால் உலர உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

செ.துஜியந்தன்

இன்று கல்முனை தமிழ் இளைஞர்சேனை அமைப்பினால் பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களையும், ஆதரவற்றோர்களைக் கொண்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்ட்டன. இளைஞர்சேனை அமைப்பின் தலைவர் சங்கீத் தலைமையில் பிரதேச இளைஞர்களினால் இவ் உலர் உணவுப்பொதிகள் வீடு வீடாகச் சென்று வழங்கிவைப்பட்டன. 2500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்ட்டன. இதற்கமைய கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ஆகிய கிராமங்களைச்சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஆதரவற்றோருக்கு இவ் உதவிகள் வழங்கப்ட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில தினங்களாக வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட தமிழ் மக்களுக்கு கல்முனை பிரதேசத்தில் அரசியல்வாதிகளினால் உதவிகள் எதுவும் வழங்கப்படாத நிலையில் பிரதேச இ.ளைஞர்களின் இவ் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.


Previous Post Next Post