அனுராதபுர சிறைச்சாலையில் கைதிகள் மீது சூடு – ஒருவர் பலி!!UPDATE

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அனுராதபுர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கைதிகள் மத்தியில் வதந்தி பரப்பட்டதையடுத்து சிலர் தப்பியோட முயற்சி எடுத்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.விசேட அதிரடிப்படை அங்கு விரைந்து தப்பியோடிய கைதிகளை மடக்கிப் பிடித்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

தடைகளையும் மீறி தப்பியோடிய கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.இதனை அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் ரவீந்திர உறுதிப்படுத்தினார்.

Previous Post Next Post