அமெரிக்காவில் இரண்டு அணைகள் உடைந்ததால் பயங்கர வெள்ளப்பெருக்கு; 10,000 பேர் வெளியேற்றம்!!

அமெரிக்காவின் மிச்சிகனில் இரண்டு அணைகள் உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து 10,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புதனன்று காலை ஒரு முழு மாகாணமே 9 அடி தண்ணீருக்கடியில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவர்னர் ஒருவர் தெரிவிக்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு பயங்கரமாக காணப்பட்டது.

மிச்சிகனில் கடுமையான மழை பொழிந்ததைத் தொடர்ந்து, சிகாகோ, இல்லினாயிஸ் மற்றும் ஓஹியோ முதலான மாகாணங்களின் சில பகுதிகளும் வெள்ளக்காடாகின.

Tittabawassee நதியில் அமைக்கப்பட்டுள்ள Edenville அணை மற்றும் Sanford அணை ஆகிய இரண்டு அணைகளும் உடைந்துள்ளதைத் தொடர்ந்து கரையோரம் அமைந்துள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், DuPage பகுதியில் 18 வயதுள்ள இளம்பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

மிக அதிக வெள்ளப்பெருக்கு இருந்ததால் அவரை தேடும் பணி தடைபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post