நாடு முழுவதும் நாளை முதல் 19 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்; ரயில்வே திணைக்களம்!!

நாடு முழுவதும் நாளை முதல் 19 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

அதன்படி, ஏழு ரயில்கள் பிரதான ரயில் பாதையிலும் ஆறு கடலோர பாதையில், நான்கு ரயில்கள் கலனி பாதையில் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு வடக்கு மற்றும் புத்தளம் நோக்கி தலா ஒரு ரயில் சேவையில் ஈடுபடும் என்றும் ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இதேவேளை பணிகளின் நிமித்தம் செல்பவர்கள் தங்கள் நிறுவங்களின் முகாமையாளர்கள் மூலம் ரயில்வே திணைக்களத்தில் சிறப்பு அனுமதி பெற்ற பின்னர் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுவார்கள் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post