ஊரடங்கு காலத்தில் கணவர்களின் தாக்குதலுக்கு இலக்காகிய 205 மனைவியர் வைத்தியசாலையில்!!

கொழும்பில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் காலத்தில் கணவன்மாரினால் தாக்கப்பட்டு காயமடைந்த 205 மனைவியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் இவர்கள் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் 21ம் திகதி முதல் நேற்றைய தினம் வரையிலான காலப் பகுதியில் இவ்வாறு தாக்குதல்களுக்கு இலக்கான 205 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், குறித்த காலப் பகுதியில் தாக்குதல்கள், மோதல்கள் காரணமாக காயமடைந்த 535 ஆண்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தாதியர் பயிற்சியாளர் சிரேஸ்ட தாதி உத்தியோகத்தர் புஸ்பா ரம்யானி சொய்சா தெரிவித்துள்ளார்.

அனேகமான மோதல் சம்பவங்களின் பின்னணியாக போதையை சுட்டிக்காட்ட முடியும் என அவர் தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post