அவுஸ்திரேலியாவில் இருந்து 2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய திட்டம்!!

அவுஸ்திரேலியாவில் இருந்து 2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் நாட்டின் பால் உற்பத்தியில் தன்னிறைவைக் கருத்திற்கொண்டு இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் வருடாந்தம் பால் மா வகைகளுக்காக செலவிடும் 50 பில்லியன் ரூபாவை மிச்சப்படுத்தமுடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது பால் உற்பத்தி 1.2 மில்லியன் லீற்றர்களாகும்.

2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதன் மூலம் நாள் ஒன்றுக்கு மேலும் ஒரு லட்சம் லீற்றர்களால் பால் உற்பத்தியை உயர்த்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இலங்கையில் நாளொன்றுக்கு 3.5 மில்லியன் லீற்றர் பாலுக்கான கேள்வி உள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post