ஒலுவில் தனிப்படுத்தல் முகாமிலிருந்த மேலும் 28 கடற்படையினருக்கு கொரோனா தொற்று; வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன்!!அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த மேலும் 28 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(19) மாலை இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது.....

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாஎல பிரதேசத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட 80 கடற்படையினர் ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.இதில் ஏலவே 10 கடற்படையினர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்தை வைத்தியசாலை மற்றும் கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டுள்ள ஏனைய 70 கடற்படையினரின் மருத்துவ மாதிரிகள் பெறப்பட்டு நேற்று (19) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதனை தொடர்ந்து 28 கடற்படையினர் கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளதுடன் அவர்கள் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு சிக்ச்சை பெற்று வருகின்றனர் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post