கல்முனை பிரதேச மௌலவி மற்றும் மு அத்தின்களுக்கு 5000 ரூபாய் கொரோணா நிவாரணம் வழங்கப்பட்டது.!

கோவிட்- 19 (கொரோனா வைரஸ்) தொற்றின் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக இயல்வு வாழ்வை இழந்த மக்களின் பசியை போக்கும் வகையில் கல்முனை வர்த்தக சங்கம் பல கட்டமாக நிவாரப்பணிகளை முன்னெடுத்து வருகிறது.

அதன் நான்காம் கட்டமாக புனித ரமழானில் தமது இயல்வு வாழ்கையை இழந்த கல்முனை பிரதேச பள்ளிவாசல்களில் மார்க்க கடமை புரியும் 90 முஅத்தின்கள் மற்றும் மௌலவிமார்களுக்கான நிவாரப்பணியை முன்னெடுக்கும் செயற்திட்டம் நேற்று (12) மாலை கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம் சித்தீக் தலைமையில் கல்முனை இக்பால் கழக சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

கல்முனை பிரதேச அனைத்து பள்ளிவாசல்களிலும் கடமை புரியும் சகல முஅத்தின்கள் மற்றும் மௌலவிமார்களுக்கும் வழங்கிவைக்கப்பட்ட 5000 ரூபாய் இந்நிவாரண உதவிகள் கல்முனை வர்த்தக சங்கத்தினால் திரட்டப்பட்ட நிதி மூலம் வழங்கப்பட்டது.

கல்முனை வர்த்தக சங்க முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் விசேட உரைகளை பொது வைத்திய நிபுணர் என்.எம். சுஹைப், மௌலவி கே.எல். சியானுதீன் ஆகியோர் நிகழ்த்தினர்.

அத்துடன் அண்மையில் சுமார் 7 மில்லியனுக்கு மேற்பட்ட நிதியினை கல்முனை பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்களிடம் இருந்து அறவிடுசெய்து கல்முனை பிரதேசத்தில் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு மூன்று கட்டங்களாக கல்முனை வர்த்தக சங்கத்தினர் வழங்கி வைத்திருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post